விஷ்வ ஹிந்து பரிஷித் தலைவர் பிரவின் தொகாடியாவை காணவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
இந்துமத அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷித் அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருபவர் பிரவின் தொகாடியா. இவருக்கு 62 வயதாகிறது. இவரை காலை முதல் காணவில்லை என்று புகார் எழுந்துள்ளது. ஒரு வழக்குத் தொடர்பாக காவல்நிலையத்திற்கு அவர் வந்துள்ளார். போலீசார் சம்மன் கொடுக்க, பிரவின் தொக்காடியா திடீரென்று காணாமல் போய் உள்ளார் என அலகாபாத் காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். இது தொடர்பாக 4 தனிப்படைகளை அமைத்து குஜராத் காவல்துறைனர் அவரைத் தேடி வருவதாக கூறப்படுகிறது.

