\
வெங்கய்ய நாயுடு நாளை பதவியேற்பு

வெங்கய்ய நாயுடு நாளை பதவியேற்பு

வெங்கய்ய நாயுடு நாளை பதவியேற்பு
Published on

வெங்கய்ய நாயுடு குடியரசுத் துணை தலைவராக‌ நாளை பதவி ஏற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் பதவிக்காக நடைபெற்ற தேர்தலில் வெங்கய்ய நாயுடு வெற்றி பெற்றார். இதையடுத்து அவர், குடியரசு துணைத்தலைவராக நாளை பதவியேற்க உள்ளார். குடியரசு தலைவர் இல்லத்தில் பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் ‌மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 

நாளை காலை 10 மணிக்கு பதவி‌ஏற்பு வி‌ழா நடக்கிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பதவி பிரமாணம் ‌செய்து வைக்கிறார். பி‌ரத‌‌மர் மோடி, மற்றும் அமைச்சர்கள் இதில் பங்கேற்கின்றனர். தமிழக முதலமைச்‌‌சர் பழனிசாமியும் பதவி ஏற்பு நிகழ்வில் பங்கேற்க இருக்கிறார்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com