\
வெங்கய்ய நாயுடு வெற்றி!

வெங்கய்ய நாயுடு வெற்றி!

வெங்கய்ய நாயுடு வெற்றி!
Published on

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெங்கையா நாயுடு வெற்றி பெற்றார்.
பாஜக முன்னிறுத்திய அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான வெங்கய்ய நாயுடு 516 வாக்குகள் பெற்று  வெற்றிபெற்றார். 
அவரை எதிர்த்து காங்கிரஸ் அணி சார்பில் போட்டியிட்ட மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி 244 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவினார். குடியரசு துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள வெங்கய்ய நாயுடுவுக்கு பிரதமர் நரேந்திரமோடி, கோபால கிருஷ்ணகாந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தற்போதைய குடியரசு துணைத்தலைவர் ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் ஆகஸ்ட் -10ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனையடுத்து வெங்கைய்ய நாயுடு முறைப்படி பதவியேற்றுக்கொள்ள இருக்கிறார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com