இந்தியா
குடியரசு துணைத் தலைவராக வெங்கய்ய நாயுடு இன்று பதவியேற்பு
குடியரசு துணைத் தலைவராக வெங்கய்ய நாயுடு இன்று பதவியேற்பு
குடியரசு துணைத் தலைவராக வெங்கய்ய நாயுடு இன்று பதவியேற்கிறார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் காலை 10 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், வெங்கய்யாவிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்கும் இந்த விழாவில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
மேலும், பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள், முதலமைச்சர்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகளும், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.