\
குடியரசு துணைத் தலைவரானார் வெங்கய்ய நாயுடு

குடியரசு துணைத் தலைவரானார் வெங்கய்ய நாயுடு

குடியரசு துணைத் தலைவரானார் வெங்கய்ய நாயுடு
Published on

டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசு துணைத் தலைவராக வெங்கய்ய நாயுடு இன்று பதவியேற்றுக் கொண்டார். 

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், வெங்கய்யாவிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 
இந்த விழாவில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும், குடியரசுத் துணைத் தலைவராக பதவியேற்றுள்ள வெங்கய்ய நாயுடு மாநிலங்களவை தலைவராகவும் பொறுப்பு வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com