இந்தியா
உறுப்பினர்கள் மாஸ்க்கை இறக்கிவிட்டு வந்தால் லைவில் காண்பிக்கப்படும் - வெங்கையா நாயுடு
உறுப்பினர்கள் மாஸ்க்கை இறக்கிவிட்டு வந்தால் லைவில் காண்பிக்கப்படும் - வெங்கையா நாயுடு
கூட்டத்தொடரில் உறுப்பினர்கள் முகக்கவசத்தை இறக்கிவிட்டு வந்தால் டிவி லைவில் காண்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் வெங்கையா நாயுடு.
கொரோனா நோய்த்தொற்று பரவல் சூழலில் கடும் பாதுகாப்பு நடைமுறைகளுடன் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் நடைபெறும்போது எம்.பி.க்கள் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சில உறுப்பினர்கள் தங்கள் முகக்கவசத்தை இறக்கி விட்டு சபைக்குள் வருகை தந்தது மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவின் கவனத்திற்கு வந்ததாக தெரிகிறது.
இதுதொடர்பாக வெங்கையா நாயுடு கூறுகையில், உறுப்பினர்கள் முகக்கவசத்தை இறக்கிவிட்டு வந்தால் டிவி லைவில் காண்பிக்கப்படும்’ என்றார்.

