\
"உண்மைத் தகவல்கள் அடிப்படையில் வரலாற்றை திருத்துங்கள்" -வெங்கையா நாயுடு

"உண்மைத் தகவல்கள் அடிப்படையில் வரலாற்றை திருத்துங்கள்" -வெங்கையா நாயுடு

"உண்மைத் தகவல்கள் அடிப்படையில் வரலாற்றை திருத்துங்கள்" -வெங்கையா நாயுடு
Published on

இந்திய வரலாற்றை உண்மைத் தகவல்கள் அடிப்படையில் மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

டெல்லியில் சுதந்திரப் போராட்டம் குறித்த கண்காட்சியை தொடங்கி வைத்தபின் வெங்கையா நாயுடு இவ்வாறு பேசினார். வெள்ளையர்கள் நம்மை அடிமைப்படுத்தியிருந்தபோது வெளியிடப்பட்ட வரலாற்று தகவல்கள் குறிப்பிட்ட சித்தாந்த அடிப்படையில் இருந்ததாகவும், இதனால் அவற்றில் பிழை நிறைந்திருந்ததாகவும் வெங்கையா நாயுடு குறிப்பிட்டார். எனவே உண்மைத் தகவல்கள் அடிப்படையில் வரலாற்றில் அறிஞர்கள் திருத்தம் செய்யவேண்டும் என குடியரசு துணைத் தலைவர் கேட்டுக்கொண்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com