வெங்கையா நாயுடு இலாக்காக்கள் வேறு அமைச்சர்களுக்கு மாற்றம்
மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதால், அவரின் இலாகாக்கள் இரண்டு அமைச்சர்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.
தேசிய ஜனநாகய கூட்டணி சார்பில் குடியரசு துணை தலைவர் வேட்பாளராக வெங்கய்ய நாயுடு அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் தாம் வகித்து வந்த பதவிகளான தகவல் தொடர்பு, ஒளிபரப்புத்துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை ஆகிய பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இந்நிலையில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு, கூடுதலாக தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அறிவிக்கப்பட்டுள்ளது. வெங்கய்ய நாயுடு கவனித்து வந்த மேலும் ஒரு இலாக்காவான நகர்புற வளர்சித்துறை, சுரங்கத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வெங்கய்யா நாயுடு, சிறு வயதில் தாயை இழந்த தன்னை, பாரதிய ஜனதா கட்சிதான் தாயாக இருந்து இந்த அளவு வளர்த்திருக்கிறது என உருக்கமாக பேசினார்.