\
''நாடாளுமன்றத்தின் புனிதம் சிதைக்கப்படுகிறது'' - கண்கலங்கிய வெங்கையா நாயுடு

''நாடாளுமன்றத்தின் புனிதம் சிதைக்கப்படுகிறது'' - கண்கலங்கிய வெங்கையா நாயுடு

''நாடாளுமன்றத்தின் புனிதம் சிதைக்கப்படுகிறது'' - கண்கலங்கிய வெங்கையா நாயுடு
Published on

எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றத்தின் புனிதம் சிதைக்கப்படுகிறது எனக்கூறி மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு கண்கலங்கினார்.

மாநிலங்களவையில் நேற்றைய தினம், எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் மேசை மீது ஏறியும், மேசை மீது அமர்ந்தும் அமளியில் ஈடுபட்டனர். இன்று அவை கூடிய உடன் இதனை சுட்டிக்காட்டி பேசிய அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, ''ஜனநாயகத்தின் கோயிலாக கருதப்படும் நாடாளுமன்றத்தின் புனிதம் சிதைக்கப்படுகிறது'' என கண்ணீருடன் கூறினார்.

இதனை நினைத்து தனக்கு உறக்கம் வரவில்லை என வேதனையுடன் பேசிய வெங்கையா நாயுடு, மரபுகளை மீறி செயல்படும் உறுப்பினர்களுக்கு கண்டனம் தெரிவிக்கக்கூட தன்னிடம் வார்த்தைகள் இல்லை என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com