இந்தியா
வேட்பாளரானார் வெங்கய்யா நாயுடு: தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து
வேட்பாளரானார் வெங்கய்யா நாயுடு: தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து
குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக வெங்கய்யா நாயுடுவை நேற்று அறிவித்தது பாஜக. டெல்லியில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சி ஆட்சி மன்றக் குழு கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் தலைவர் அமித் ஷா இதனை அறிவித்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வெங்கய்ய நாயுடு இன்று காலை 11 மணிக்கு வேட்பு மனுதாக்கல் செய்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் தனது மத்திய அமைச்சர் பதவியை வெங்கய்ய நாயுடு ராஜினாமா செய்துள்ளார். வெங்கய்யா நாயுடு, குடியரசுத் துணை தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து தமிழக தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.