“தமிழில் பதவி ஏற்போம்” - எம்.பி.ரவிக்குமார் வேண்டுகோள்

“தமிழில் பதவி ஏற்போம்” - எம்.பி.ரவிக்குமார் வேண்டுகோள்
“தமிழில் பதவி ஏற்போம்” - எம்.பி.ரவிக்குமார் வேண்டுகோள்

புதிதாக தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் நேற்று முதல் பதவியேற்று வருகின்றனர். பிரதமர் மோடி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள், பாஜக எம்.பி.க்கள், ராகுல், சோனியா, ஜெகன் கட்சி எம்.பி.க்கள் என பலரும் நேற்று பதவியேற்றனர். இந்நிலையில் தமிழகத்தில் இருந்து தேர்வான் எம்.பி.க்கள் இன்று பதவியேற்க உள்ளனர். தமிழக எம்.பி.க்கள் அனைவரும் தமிழிலேயே பதவி ஏற்க வேண்டுமென ஏற்கனவே பலரும் கோரிக்கை வைத்தனர்.

அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் பதவியேற்க மக்களவை செயலகம் வழிவகை செய்துள்ளது. இந்நிலையில் தமிழில் பதவியேற்க உள்ளதாக தர்மபுரி திமுக எம்.பி. செந்தில்குமார் தெரிவித்திருந்தார். இன்று காலை விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் தனது ட்வீட்டில் “தமிழக எம்.பி.க்கள் தமிழிலேயே பதவியேற்க வேண்டும், கட்சி வேறுபாடின்றி இதனை பரிசீலிக்க வேண்டுமென” கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனை ஏற்றுக் கொண்டு தமிழிலேயே தமிழக எம்.பி.க்கள் பதவியேற்போம் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com