ஜல்ராபதான் தொகுதியில் வசுந்தரா ராஜே முன்னிலை!

ஜல்ராபதான் தொகுதியில் வசுந்தரா ராஜே முன்னிலை!

ஜல்ராபதான் தொகுதியில் வசுந்தரா ராஜே முன்னிலை!
Published on

ராஜஸ்தான் தேர்தலில் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே, காங்கிரஸ் வேட்பாளரை விட 4055 வாக்குகள் முன்னிலை வகிக்கிறார்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல்கள் சென்ற மாதம் 12ஆம் தேதி தொடங்கி கடந்த 7ஆம் தேதி வரை நடந்தன. இறுதிக்கட்டமாக கடந்த 7ஆம் தேதி ராஜஸ்தான் மற்றும் தெலங்கானாவில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. பெரும்பாலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதுமின்றி ஐந்து மாநில தேர்தலும் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. 

வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியுள்ளது. ஆட்சியமைக்கப்போவது யார் என்ற தகவல்கள் பிற்பகலுக்குள் தெரியவரும். வாக்கு எண்ணிக்கைக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

ஐந்து மாநிலங்களில் ராஜஸ்தான், சத்தீஷ்கர், மத்தியபிரதேச மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சியும் மிசோராமில் எம்என் எஃப் கட்சியும் முன்னிலை வகிக்கின்றன.

ராஜஸ்தான் மாநில பாஜக முதல்வர் வசுந்தரா ராஜா, ஜல்ராபதான் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் மன்வேந்திர சிங் போட்டியிட்டார். அவரைவிட 4055 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார் வசுந்தரா ராஜே. அவரது தலைமையிலான பாஜக அங்கு தோல்வியை தழுவினாலும் அவர் முன்னிலை பெற்று வருகிறார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com