இந்தியா
எச்.வசந்தகுமார் அர்ப்பணிப்பு நம் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கும்: ராகுல்காந்தி இரங்கல்
எச்.வசந்தகுமார் அர்ப்பணிப்பு நம் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கும்: ராகுல்காந்தி இரங்கல்
கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் மறைவுக்கு காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “ கோவிட் -19 காரணமாக கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் அகால மரணம் அடைந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களுக்கு சேவை செய்வதற்கும், காங்கிரஸ் கொள்கைகளுக்கும் அவரது அர்ப்பணிப்பு நம் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கும். அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு மனமார்ந்த இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்