மண்டை ஓடுகளோடு விவசாயிகள் போராடும்போது எம்.எல்.ஏக்களுக்கு சம்பள உயர்வா?

மண்டை ஓடுகளோடு விவசாயிகள் போராடும்போது எம்.எல்.ஏக்களுக்கு சம்பள உயர்வா?
மண்டை ஓடுகளோடு விவசாயிகள் போராடும்போது எம்.எல்.ஏக்களுக்கு சம்பள உயர்வா?
Published on

மண்டை ஓடுகளோடு விவசாயிகள் போராடிக்கொண்டிருக்கும்போது தமிழக அரசு எம்எல்ஏக்களின் சம்பளத்தை உயர்த்தியிருக்கிறது என பாஜக எம்.பி வருண் காந்தி மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “ கடந்த 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் வெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களில் 449 பேர் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து உள்ளவர்கள். இவர்களில் 24 சதவீதம் பேர் 10 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து கொண்டவர்கள்.  தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அடிப்படை மாத சம்பளம் ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது. அத்துடன் அலவன்ஸ் ரூ.45 ஆயிரம், சொந்த அலுவலகச் செலவுக்கு ரூ.45 ஆயிரம் என்ற மொத்தம் எம்.பி.க்களுக்கு ரூ.2.7 லட்சம் செலவிடப்படுகிறது. கடந்த 2016ம் ஆண்டில் மட்டும் 543 எம்.பிகளுக்காக மட்டும் 176 கோடி அரசு செலவு செய்துள்ளது.

மழை பாதிப்பு, பயிர்க் கடன் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் மைதானத்தில் தமிழக விவசாயிகள் தங்களது கைகளில் மண்டை ஓடுகள் வைத்து கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் தமிழக அரசு எம்எல்ஏக்கள் ஊதியத்தை இருமடங்காக உயர்த்தியுள்ளது. இந்த உயர்வு கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் அமலுக்கு வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் மட்டும், எம்பிக்கள் ஊதியம் மட்டும் 400 சதவீதம் வரை உயர்வு கண்டிருக்கிறது. நல்ல லாபத்தில் இயங்கும் தனியார் நிறுவனங்களில் கூட இந்த ஊதிய உயர்வு சாத்தியமில்லை. எனவே பணக்கார நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பளம் இல்லாமல் பணியாற்ற வேண்டும் ” என வருண்காந்தி தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com