ஸ்பீடு ஓகே தான்.. ஆனால்!! ஷாக் கொடுக்கும் வந்தே பாரத் ரயில் பயண கட்டணம்!

ஸ்பீடு ஓகே தான்.. ஆனால்!! ஷாக் கொடுக்கும் வந்தே பாரத் ரயில் பயண கட்டணம்!
ஸ்பீடு ஓகே தான்.. ஆனால்!! ஷாக் கொடுக்கும் வந்தே பாரத் ரயில் பயண கட்டணம்!

சென்னை ICF -ல் தயாரிக்கப்பட்ட இந்த ரயில் கடந்த வாரம் தெற்கு ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் ,பொதுமக்கள் பயணம் செய்வதற்கு முன்பு ரயிலை சோதிக்கும் விதமாக சென்னையில் இருந்து மைசூருக்கும் மைசூரிலிருந்து சென்னைக்கும் சோதனை ஓட்டம் இன்று துவங்கியது.

இந்திய ரயில் தடத்தில் அதிவேக பயணத்தை மேற்கொள்ளும் வந்தே பாரத் ரயில் திட்டம் ஏற்கனவே நான்கு வழித்தடங்களில் துவங்கப்பட்ட நிலையில், ஐந்தாவதாக சென்னை - மைசூர் இடையே இயக்கப்பட உள்ளன.

இந்த ரயிலின் முதல் சேவை டெல்லி - வாரணாசி வழித்தடத்திலும், 2-வது சேவை டெல்லி - காஷ்மீரின் வைஷ்ணவி தேவி கோயில் வழித்தடத்திலும், 3-வது சேவை மும்பை - காந்தி நகர் வழித்தடத்திலும், 4-வது சேவை இமாச்சலப் பிரதேசம் உனாவின் அம்ப் அண்டவ்ரா - புதுடெல்லி வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இதன் 5-வது சேவை சென்னை - பெங்களூரு - மைசூரு வழித்தடத்தில் இன்று தொடங்கப்பட்டது. ’வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன அதிவேக ரயில்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ரயிலானது சென்னையில் இருந்து மைசூர் வரை செல்லக்கூடிய ரயில் மீண்டும் மைசூரில் இருந்து சென்னை நோக்கி வரக்கூடிய ரயில் இந்த வழித்தடத்தில் ஜோலார்பேட்டை காட்பாடி வழியாக அதிவேக ரயிலாக இயக்கப்படுகிறது. வினாடிக்கு 180 கிலோமீட்டர் அளவிற்கு வேகமாக பயணிக்கும்.

எந்த நேரத்துக்கு இயக்கப்படும்? - இன்றைய சோதனை ஓட்டம்

காலை 5.50 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த ரயில் ஜோலார்பேட்டைக்கு 8.50 மணிக்கும், கே.எஸ்.ஆர் பெங்களூரு ரயில் நிலையத்திற்கு 10.25 மணிக்கு சென்று சேர்ந்தது. 5 நிமிடங்கள் நின்று 10.30 மணிக்கு புறப்பட்டு மைசூருவை 12.30 மணிக்கு சென்றடைந்தது. மைசூருவில் இருந்து மதியம் 1.05 மணிக்கு புறப்பட்ட இந்த ரயில் ஜோலார் பேட்டைக்கு 4.55 மணிக்கு கடந்து சென்றது. இதனையடுத்து, இரவு 7.45 மணிக்கு சென்னை வந்தடைந்தது. 504 கி.மீட்டர் தொலைவை 6..40 மணி நேரத்தில் கடக்கிறது. இந்த ரயில் 75.60 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எவ்வளவு கட்டணம் ? 

> சென்னையிலிருந்து மைசூர் செல்ல ‘சேர் கார்’ல் டிக்கெட் விலை ரூ.1200, ’எக்ஸிக்யூட்டிவ் கார்’ ரூ.2295 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

> சென்னையிலிருந்து காட்பாடி செல்ல ‘சேர் கார்’ல் ரூ.495, ‘எக்ஸிக்யூட்டிவ் கார்’950 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

> சென்னையிலிருந்து பெங்களூர் ரயில் நிலையம் செல்ல ’சேர் கார் ‘ ரூ.995, ’எக்ஸிக்யூட்டிவ் கார்’ ரூ.1885 வசூலிக்கப்படுகிறது.

> பெங்களூரிலிருந்து மைசூர் செல்ல ’சேர் கார்’ ரூ.515, ’எக்ஸிக்யூட்டிவ் கார்’ல் ரூ. 985 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com