இந்தியா
வானதி சீனிவாசன் பாஜக தேசிய மகளிரணி தலைவராக நியமனம்.
வானதி சீனிவாசன் பாஜக தேசிய மகளிரணி தலைவராக நியமனம்.
தமிழகத்தைச் சேர்ந்த வானதி சீனிவாசன் பாஜக தேசிய மகளிரணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த அறிவிப்பினை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண்சிங் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில் “ தமிழ்நாட்டை சேர்ந்த வானதி சீனிவாசன் பாஜகவின் தேசிய மகளிரணி தலைவராக பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் உடனடியாக நடைமுறைக்கு வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது