வாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: வெளியானது அடுத்த அறிக்கை

வாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: வெளியானது அடுத்த அறிக்கை

வாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: வெளியானது அடுத்த அறிக்கை
Published on

வாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

முன்னாள் பிரதமரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான வாஜ்பாய் கடந்த 9 வாரங்களாக சிறுநீரக தொற்று காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே வாஜ்பாயின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது. அதில் கடந்த 24 மணி நேரத்தில் வாஜ்பாயின் உடல்நிலை மிகுந்த அளவில் மோசமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களுடன் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. முன்னதாக மருத்துவமனைக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, வாஜ்பாயின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். சுமார் 50 நிமிடங்கள் மருத்துவமனையில் இருந்த பிரதமர், பின்னர் திரும்பினார். இதேபோல வாஜ்பாய் விரைவில் குணமடைய காங்கிரஸ் கட்சியும் வாழ்த்து தெரிவித்து உள்ளது.

இந்நிலையில் வாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், உயிர்காக்கும் கருவிகள் மூலம் வாஜ்பாய்க்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com