டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல்: பொதுமக்கள் அஞ்சலி

டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல்: பொதுமக்கள் அஞ்சலி
டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல்: பொதுமக்கள் அஞ்சலி

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடலுக்கு நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையில் காத்திருந்து தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

டெல்லியில் கிருஷ்ண மேனன் மார்க்கில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த வாஜ்பாய் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் அவரது உடல் ஏற்றிச் செல்லப்பட்டு, பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் அஞ்சலிக்காக பாரதிய ஜனதா தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ளது.  நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையில் காத்திருந்து தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பொதுமக்களின் அஞ்சலிக்குப் பின் இன்று மதியம் 1 மணிக்கு இறுதி ஊர்வலம் தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com