வைகுண்ட ஏகாதசி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற சொர்க்க வாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற சொர்க்க வாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற சொர்க்க வாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு வைபவம் விமர்சையாக நடைபெற்றது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி இன்று அதிகாலை 1.30 மணிக்கு கோயில் ஜீயர்கள் முன்னிலையில் அறங்காவலர் குழுத் தலைவர், செயல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் கோயில் அர்ச்சகர்கள் ஆகம முறைப்படி வேத மந்திரங்கள் முழுங்க சொர்க்கவாசலை திறந்து வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.

பின்னர் 2 மணி முதல் மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள், மற்றும் உயர்அதிகாரிகள் என முக்கிய பிரமுகர்கள் குடும்பத்தினருடன் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அதிகாலை 5 மணிக்கு சர்வ தரிசனத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இன்று அனைத்து ஆர்ஜித சேவைகளும், முன்னுரிமை தரிசனமும் ரத்து செய்யப்பட்டதால் 13 ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை பத்து நாட்கள் பக்தர்கள் தொடர்ச்சியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு சொற்கவாசல் வழியாக அனுமதிக்கப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் வைகுண்ட ஏகாதசி, துவாதசியையொட்டி கோயிலுக்கு உள்ளேயும் வெளியேயும் 7 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வெளியே சப்த துவாரங்களை கடந்து சென்றால் வைகுண்டத்தில் மகாலட்சுமியுடன் மகாவிஷ்ணு காட்சியளிக்கும் விதமாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது அனைவரையும் கவரும் விதமாக காட்சியளித்தது.

நாளை காலை 9 மணி முதல் 11 மணி வரை தங்க ரதத்தில் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார். இந்த தங்கத்தேரை வடம்பிடித்து இழிப்பதற்காக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட தேவஸ்தான பெண் பணியாளர்களை ஈடுபடுத்த உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com