கேரளா | விரைவு ரயிலில் பெண் டிடிஇ தாக்கப்பட்ட சம்பவம் - கழிப்பறையில் பதுங்கியிருந்த பயணி கைது!

கேரள மாநிலம் வடகஞ்சேரி அருகில் உள்ள வடகரையில் ரயிலில் டிக்கெட் பரிசோதகர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
ரயில்
ரயில்கோப்புப்படம்

பெங்களூரு கன்னியாகுமரி விரைவு ரயிலில் மதுசூதனன் நாயர் என்பவர் பயணம் செய்துள்ளார். இவர் ஜெனரல் டிக்கெட் வாங்கிவிட்டு ஸ்லீப்பர் வகுப்பில் பயணித்து இருக்கிறார். ரயிலானது வடகஞ்சேரி அருகில் வரும்பொழுது, பெண் டிக்கெட் பரிசோதகர், மதுசூதனின் டிக்கெட்டை பரிசோதித்துள்ளார். அவர் ஜெனரல் டிக்கெட் வாங்கிக்கொண்டு ஸ்லீப்பரில் பயணித்து வந்தது தெரியவரவே அவருக்கு அபராதம் விதித்துள்ளார். இதில் மதுசூதனனுக்கும் பெண் டிடிஇ-க்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ரயில்
டெல்லி | திகார் சிறை, மருத்துவமனைகள், விமானநிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மதுசூதனனுக்கு ஆதரவாக, இந்தச் சம்பவத்தில் கொல்லத்தை சேர்ந்த அஷ்வின், பொன்னானியை சேர்ந்த ஆஷிக் ஆகியோர் பெண் டிடிஇ-யிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒருகட்டத்தில் பெண் டிடிஇ-யை மதுசூதனன் தாக்கியுள்ளார்.

பெண் டிடிஇ தாக்கப்பட்டது தெரிந்ததும் சக டிடிஇ-யான உத்தரப்ரதேசத்தைச் சேர்ந்த மனோஜ் வர்மா மற்றும் திருவனந்தபுரத்தைச்சேர்ந்த ஷம்மி ராஜா, சென்னை எக்ஸ்பிரஸ்ஸை சேர்ந்த டிடிஇ ஆர்த்ரா கே.அனில் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

இவர்களையும் மதுசூதனன் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் டிடிஇ-யின் புகாரின் அடிப்படையில், ஆர்பிஎப் போலீசார் அஷ்வின் மற்றும் ஷம்மி ஆஷிக் ஆகியோரை கைது செய்தனர். ஆனால் மதுசூதனை காணவில்லை.

இந்நிலையில் ரயிலானது வடகன்சேரிக்கு வரும்பொழுது, ஆர்பிஎஃப் போலிஸுக்கு பயந்து மதுசூதனன் கழிப்பறையில் பதுங்கியிருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீஸார் மதுசூதனையும் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com