இந்திய இருமல் மருந்தை குடித்த 18 குழந்தைகள் உயிரிழப்பு - உஸ்பெகிஸ்தான் அரசு குற்றச்சாட்டு

இந்திய இருமல் மருந்தை குடித்த 18 குழந்தைகள் உயிரிழப்பு - உஸ்பெகிஸ்தான் அரசு குற்றச்சாட்டு
இந்திய இருமல் மருந்தை குடித்த 18 குழந்தைகள் உயிரிழப்பு - உஸ்பெகிஸ்தான் அரசு குற்றச்சாட்டு

இந்தியாவிலிருந்து தயாரித்து அனுப்பப்பட்ட இருமல் மருந்தை குடித்ததால் 18 குழந்தைகள் உயிரிழந்து உள்ளதாக உஸ்பெகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

உஸ்பெகிஸ்தான் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி, நுரையீரல் தொடர்பான நோய்களுக்காக சிகிச்சை பெற்று வந்த 21 குழந்தைகளுக்கு இந்தியாவிலிருந்து தயாரிக்கப்பட்ட டாக் ஒன் மேக்ஸ் என்ற இருமல் மருந்தை கொடுத்ததாகவும் இதில் 18 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மூன்று முதல் ஏழு நாட்களுக்கு என, ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு தடவை 2.5 எம்எல் என்ற தர அளவில் 2 முதல் 7 நாள்களுக்கு இருமல் மருந்தை குழந்தைகளுக்கு கொடுத்ததாகவும், அதை குடித்த பின்னர் குழந்தைகள் உயிரிழந்திருப்பதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உஸ்பெகிஸ்தான் நாட்டின் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து உத்திர பிரதேச மாநிலத்தின் நொய்டாவில் தலைமையகத்தை கொண்டுள்ள மருந்து தயாரிப்பு நிறுவனத்திடம் விசாரணையை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் உதவியுடன் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்கு உஸ்பெகிஸ்தான் நாடும் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் காம்பியா நாட்டிலும் இந்தியாவிலிருந்து தயாரித்து அனுப்பப்பட்ட இருமல் மருந்தை குடித்து 66 குழந்தைகள் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது. இப்படியான நிலையில் தற்பொழுது உஸ்பெகிஸ்தான் நாட்டிலும் அதே குற்றச்சாட்டு எழுந்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளிடையே இந்தியா மீதான அதிருப்தியும் எழுந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com