உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் பெயர் பரிந்துரை
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் பொறுப்பேற்கவுள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள என். வி.ரமணா இந்த மாதம் 26ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெறவுள்ளார். இதையடுத்து, புதிய தலைமை நீதிபதி யாரென பரிந்துரைக்குமாறு அவரிடம் மத்திய சட்டத் துறை கேட்டிருந்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான உதய் உமேஷ் லலித் பெயரை என்.வி.ரமணா மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளார். அதை ஏற்று நாட்டின் 49ஆவது தலைமை நீதிபதியாக லலித் பெயரை மத்திய சட்ட அமைச்சகம் விரைவில் அறிவிக்கவுள்ளது.
கடந்த 1957 ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி பிறந்தவரான 64 வயது உதய் உமேஷ் லலித், தனது 74 நாட்கள் மட்டுமே தலைமை நீதிபதியாக இருந்து நவம்பர் 8ஆம் தேதி பணி ஓய்வு பெறவுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த உதய் உமேஷ் லலித் உச்சநீதிமன்ற நேரடி வழக்கறிஞராக, நேரடி நீதிபதியாக நியமிக்கப்பட்டு தலைமை நீதிபதியாக உயர்ந்த இரண்டாவது நீதிபதி ஆவார்.