இந்தியா
யமுனை நதியில் படகு விபத்து: பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு
யமுனை நதியில் படகு விபத்து: பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு
உத்தரப்பிரதேச மாநிலம் யமுனை நதியில் நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத்தில் யமுனை நதியில் சென்றுக் கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 60 பேர் சென்ற அந்தப் படகு பாரம் தாங்காமல் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. தண்ணீரில் தத்தளித்த 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காணமல் போனவர்களை தேடும் பணியில், விபத்து நடந்த பகுதியில் காவல்துறையினரும், மீட்புப் படையினரும் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.