உத்தரப் பிரதேச அதிர்ச்சி: 200 ரூபாய்க்கு போலி கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழ்

உத்தரப் பிரதேச அதிர்ச்சி: 200 ரூபாய்க்கு போலி கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழ்

உத்தரப் பிரதேச அதிர்ச்சி: 200 ரூபாய்க்கு போலி கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழ்
Published on

உத்தரப் பிரதேசத்தில் கொரோனா நெகட்டிவ் என போலியான சான்றிதழ் தர சுகாதார மைய ஊழியர் 200 ரூபாய் லஞ்சம் கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபாருகாபாத் மாவட்டத்தில் உள்ள நவாப்கஞ்ச் சமூக சுகாதார மையத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்த விஜய் பால், கொரோனா “நெகட்டிவ்” பரிசோதனை அறிக்கை தயாரிக்க 200 ரூபாய் லஞ்சம் கேட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.  இதனைத்தொடர்ந்து ஃபாருகாபாத் மாவட்ட நீதிபதி மன்வேந்திர சிங், புதன்கிழமை அந்த சுகாதார மைய ஊழியரை பணியிலிருந்து நீக்கியதுடன், அவர்மீது எஃப்..ஆர் பதிவு செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக சமூக ஊடகங்களில் வைரலாகிய அந்த வீடியோவில்,  விஜய் பால் ஒருவரிடம் கோவிட்-19 நெகட்டிவ் என போலியான சான்றிதழ் அளிப்பதற்கு 200 ரூபாய் பணம் கேட்கிறார். போலியான சோதனை அறிக்கையை கேட்ட நபர் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com