uttarpradesh mother battles crocodile saves 5 year old
model imagemeta ai

உ.பி. | முதலையிடம் இருந்து மகனை மீட்ட வீரமிக்க தாய்!

உத்தரப்பிரதச மாநிலத்தில் கால்வாயில் விழுந்த மகனை விழுங்க முயன்ற முதலையிடம் சண்டையிட்டு தாய் காப்பாற்றிய சம்பவம் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
Published on
Summary

உத்தரப்பிரதச மாநிலத்தில் கால்வாயில் விழுந்த மகனை விழுங்க முயன்ற முதலையிடம் சண்டையிட்டு தாய் காப்பாற்றினார்.

உத்தரப்பிரதச மாநிலத்தில் கால்வாயில் விழுந்த மகனை விழுங்க முயன்ற முதலையிடம் சண்டையிட்டு தாய் காப்பாற்றிய சம்பவம் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில், திங்கள் கிழமை மாலை கால்வாய் கரை அருகே விளையாடிக் கொண்டிருந்த வீர் என்ற 5 வயது சிறுவனை கால்வாயில் இருந்து தலையைத் தூக்கிய முதலை கவ்வி தண்ணீருக்குள் இழுத்து சென்றது. அப்போது சிறுவன் கதறியதை அடுத்து ஓடோடி வந்த தாய், கால்வாய்க்குள் குதித்து முதலையை கைகளால் தாக்கினார்.

uttarpradesh mother battles crocodile saves 5 year old
model imagemeta ai

பதிலுக்கு முதலை தாயை கடித்தது, முதலையிடம் இருந்து சிறுவனை காப்பாற்ற தொடர்ந்து போராடினார். இரும்பு ராடு ஒன்றால் முதலையை கடுமையாக தாக்கினார். இதன் பின்னர் முதலை சிறுவனை போட்டுவிட்டு தப்பியது. காயம் அடைந்த சிறுவனும், தாயும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தாய் மாயா அளித்த பேட்டியில் தம்முடைய உயிரைப் பற்றி கவலைப்படாமல் கால்வாயில் குதித்து தம்முடையை வலிமையால் மகனை மீட்டதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.

uttarpradesh mother battles crocodile saves 5 year old
கரையில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை தண்ணீருக்குள் இழுத்துச் சென்ற முதலை! பாதி உடல் மட்டுமே மீட்பு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com