uttarpradesh hindu groups climbed mosque with saffron flag video
video imagex page

உ.பி. | மசூதியில் காவிக் கொடி கட்ட முயன்ற இந்துத்துவா அமைப்பினர்! அதிர்ச்சி சம்பவம்.. #ViralVideo

உத்தரப்பிரதேசத்தில், இந்து அமைப்பினர் சிலர் காவிக் கொடிகளை ஏந்தியவாறு மசூதியின் மீது ஏறியதால் பதற்றம் நிலவியது.
Published on

இந்துக்களின் பண்டிகைகளில் ஒன்றான, ராம நவமி நாடு முழுவதும் நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் உள்ள மசூதி ஒன்றில் இந்து அமைப்பைச் சேர்ந்த சிலர், காவிக் கொடிகளுடன் ஏறியதால் பதற்றம் நிலவியது. பிரயாக்ராஜில் பல இடங்களில் ராம நவமி கொண்டாடப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்து அமைப்பினர் சிலர் அந்தப் பகுதியில் பேரணி சென்றனர். அப்போது சிக்கந்தரா பகுதியில் இருக்கும் சையத் சலார் ஹாஜி தர்கா மீது திடீரென ஏறிய இந்து அமைப்பினர், ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட்டப்படி கொடிகளை அங்கு கட்ட முயன்றுள்ளனர்.

மேலும், தர்காவுடன் கூடிய அந்த மசூதியை இடித்து கோயில் கட்டவேண்டும் என்றும் கூறி கோஷமிட்டுள்ளனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவியதைத் தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இந்து அமைப்பினரை தர்ஹாவில் இருந்து வெளியேற்றினர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்வதாக காவல்துறையினர் உறுதியளித்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

uttarpradesh hindu groups climbed mosque with saffron flag video
’ஜெய் ஸ்ரீராம்' கோஷத்துடன் மகாராஷ்டிராவில் இடிக்கப்பட்ட மசூதி.. வைரலாகும் வீடியோ.. பின்னணியில் யார்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com