இந்தியா
அம்மாவை பிரிந்த யானைக்குட்டி- குழந்தை போல் பராமரிக்கும் காப்பகம்
அம்மாவை பிரிந்த யானைக்குட்டி- குழந்தை போல் பராமரிக்கும் காப்பகம்
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள புலிகள் காப்பகத்தில் தாயிடம் இருந்து பிரிந்து வாடி வந்த குட்டி யானையை, காப்பக பணியாளர்கள் கண்ணும் கருத்துமாக பராமரித்து வருகின்றனர்.
உத்தரகாண்ட் மாநிலம் மொடிச்சூர் வனப்பகுதியில் உள்ள யானைகள் கூட்டத்தில் இருந்து பிரிந்த தனியாக வந்த ஒரு யானை குட்டியை வனத்துறையினர் மீட்டு புலிகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். அந்த காப்பகத்தில் யானைக்குட்டிக்கு உணவளிப்பது, அதனை குளிப்பாட்டுவது, நடைப்பயிற்சிக்கு அழைத்து செல்வது என யானைக்குட்டிக்கு ராஜ உபசரிப்பு அளிக்கப்படுகிறது. விரைவில் இந்த குட்டி யானை அதன் தாயுடன் சேர்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.