பாலியல் பலாத்காரம் செய்யவந்த தந்தையை கொன்ற மகள் ?

பாலியல் பலாத்காரம் செய்யவந்த தந்தையை கொன்ற மகள் ?

பாலியல் பலாத்காரம் செய்யவந்த தந்தையை கொன்ற மகள் ?
Published on

உத்தரகாண்ட் மாநிலத்தில் பாலியல் பலாத்காரம் செய்யவந்த தந்தையை மகள் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். 

உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர் காஷி மாவட்டத்திலுள்ள பாட்கோட் பகுதியில் 51 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 26 வயதில் திருமணமான மகள் உள்ளார். இவரது மகள் கடந்த திங்கட்கிழமை குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வீட்டிற்கு வந்துள்ளார். இவரது வீட்டிலுள்ள மற்றவர்கள் மற்றொரு குடும்ப நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். 

இதனையடுத்து தந்தையும் மகளும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். இந்தச் சமயத்தை பயன்படுத்தி தூங்கிக் கொண்டிருந்த மகளின் அறைக்குள் தந்தை சென்றதாக கூறப்படுகிறது. அங்கு சென்று மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். இதனைத் தடுக்க முயன்ற மகள் அருகிலிருந்த கத்தியை எடுத்து பலமுறை தந்தை மீது குத்தியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அப்பெண்ணின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அப்பகுதி வருவாய் காவலர்கள் அந்தப் பெண்ணை கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக பாட்கோட் பகுதி காவல் ஆய்வாளர் டிஎஸ் கோலி, “51 வயது மதிக்க தக்க நபர் இறந்துள்ளார். ஆனால் அவரின் இறப்பிற்கு முழுமையான காரணம் தெரியவில்லை. எனினும் இந்தச் சம்பவம் குறித்து அப்பகுதிகள் மக்கள் கூறியதை கேட்டோம். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய பெண்ணை வருவாய் காவலர் கைது செய்துள்ளார். அவர் எங்களிடம் அந்தப் பெண்ணை ஒப்படைத்தவுடன் எங்களது விசாரணை முழுமையாக நடைபெறும்” எனத் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com