உத்தராகண்ட்: கட்டுமானப்பணியின் போது சுரங்கப்பாதை சரிந்து விபத்து - 40 பேரை மீட்கும் பணி தீவிரம்

உத்தராகண்ட் மாநிலத்தில் கட்டுமானப்பணியின் போது சுரங்கப்பாதை சரிந்து உள்ளே சிக்கித் தவித்து வரும் 40 பேரை மீட்கும் பணி 2 ஆவது நாளாக நடைபெற்று வருகிறது
Rescue
Rescuept desk

உத்தராகண்ட் மாநிலம் சில்க்யாரா பகுதியில் தேசிய நெடுஞ்சாலைக்கு கீழ் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை 9 மணியளவில் சுரங்கத்ததின் சுவர்கள் சரிந்து விழுந்தன. உள்ளே சுமார் 40 தொழிலாளர்கள் இருந்ததாக கருதப்படும் நிலையில் அவர்களை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Rescue
Rescuept desk

அதிநவீன துளையிடும் இயந்திரங்கள் உதவியுடன் இடிபாடுகளை அகற்றும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்கள் சுவாசிக்க வசதியாக குழாய் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. மீட்பு பணிகளை உத்தராகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி கண்காணித்து வருகிறார்.

தேசிய நெடுஞ்சாலையில் சுமார் நான்கரை கிலோ மீட்டர் நீளத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வரும் நிலையில் அதில் 35 மீட்டர் நீளத்திற்கு சரிவு ஏற்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் மீட்கப்பட்டால் அவர்களுக்கு முதலுதவி அளித்து மருத்துவமனை அழைத்துச் செல்ல மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர். ஹெலிகாப்டர் மற்றும் ஆம்புலன்சும் தயார் நிலையில் உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com