பொது சிவில் சட்டம் அமலுக்கு வரும் முதல் மாநிலமாகிறது உத்தராகண்ட்!
உத்தராகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் இன்று அமலுக்கு வருகிறது. இச்சட்டத்திற்கு பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், உத்தராகண்ட் பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலைத் தொடர்ந்து அண்மையில் அம்மாநில அமைச்சரவையும் ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக பொது சிவில் சட்டத்தை உத்தராகண்ட் இன்று அமல்படுத்துகிறது. இதற்கான பிரத்யேக இணையதளத்தை இன்று நண்பகல் 12.30 மணிக்கு முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தொடங்கி வைக்கிறார்.
திருமணம், வாரிசுரிமை, விவாகரத்து உள்ளிட்ட விவகாரங்களில் அனைத்து மதத்தினரும் ஒரே சட்டத்தை பின்பற்றுவதே பொது சிவில் சட்டத்தின் நோக்கமாகும். உத்தராகண்டில் அமலுக்கு வரும் இச்சட்டத்தின்படி, Live in relationship எனப்படும் திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்வோர், தங்கள் உறவு குறித்து பதிவு செய்ய வேண்டும் என்ற அம்சமும் இடம்பெற்றுள்ளது.