மன அழுத்தம் போக்க, பி.பி.இ உடையிலேயே நடனமாடிய ஆம்புலன்ஸ் டிரைவர்!

மன அழுத்தம் போக்க, பி.பி.இ உடையிலேயே நடனமாடிய ஆம்புலன்ஸ் டிரைவர்!
மன அழுத்தம் போக்க, பி.பி.இ உடையிலேயே நடனமாடிய ஆம்புலன்ஸ் டிரைவர்!

உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர், தனது மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் திருமண ஊர்வலத்தில் நடனம் ஆடியிருக்கார். இவர் நடமாடிய வீடியோ காட்சி, இணையவாசிகளின் இதயங்களை வென்று வருகிறது.

அதிகரித்து வரும் கொரோனா காரணமாக இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பு நேரடியாக மிகமோசமாக பாதித்துள்ளது. மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்ஸிஜன் மற்றும் மருந்துகள் பற்றாக்குறை நிலவி வருவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. இந்த இக்கட்டான சூழலிலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க கூடுதல் நேரம் வேலை செய்யும் சுகாதார ஊழியர்களும் உள்ளனர். செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவர்கள் தங்கள் சோர்வை ஒதுக்கி வைத்துவிட்டு, தங்கள் கடமையை, தங்கள் உயிரைப் பணயம் வைத்து நிறைவேற்றி வரும் சம்பவங்கள் உள்ளன. அப்படி அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து வருபவர்கள் தான் நம் நாட்டின் உண்மையான, ஹீரோக்கள்.

இதுபோன்ற வேலைப்பளுவுக்கு மத்தியிலிருந்த உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் தனது மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் திருமண ஊர்வலத்தில் நடனம் ஆடியிருக்கும் செயல் இணையவாசிகளின் இதயங்களை வென்று வருகிறது. மகேஷ் என்ற நபர் உத்தரகண்ட் மாநிலத்தின் ஹல்த்வானியில் உள்ள டாக்டர் சுஷீலா திவாரி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக உள்ளார். கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பணியில் அவர் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இவர் திருமண ஊர்வலத்தில் பிபிஇ கிட் ஆடையுடன் ஆடிய வீடியோதான் இணையங்களில் வைரலாகியது.

இது தொடர்பாக பேசிய ஆம்புலன்ஸ் டிரைவர் மகேஷ், ``கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வருவது தான் எனது பணி. இதற்காக நான் மருத்துவமனையிலேயே தங்கி இருக்கிறேன். இன்னும் நான் வீட்டிற்குச் செல்லவில்லை. இதனால் நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன். மருத்துவமனைக்கு முன்னால் திருமண ஊர்வலத்தை பார்த்த பிறகு என்னால் என்னை கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. அதனால் இறங்கி நடமாட தொடங்கிவிட்டேன். கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் நடனமாடினேன்.

நடனமாடிய தருணத்தில், சுற்றியிருந்த அனைத்து விஷயங்களையும் மறந்துவிட்டேன். நடனமாடிய பிறகு, என் மனம் ரிலாக்ஸாக மாறியது. குறிப்பாக என் மன அழுத்தம், காணாமல் போனது" என்று உருக்கமாக தெரிவித்துள்ளார். மகேஷின் பேச்சை போலவே, அவரின் நடனமும் அப்பாவியாக இருக்க, தற்போது மகேஷுக்கு ஆதரவாக பலரும் கருத்துக்கள் தெரிவித்து அவரின் டான்ஸுக்கு லைக்குகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com