”வாழ விருப்பமில்லை.. தற்கொலைக்கு அனுமதியுங்கள்..” நீதிபதியால் பாலியலுக்கு ஆளான பெண் நீதிபதி கடிதம்!

நீதி வழங்கும் நீதித்துறையிலேயே, பெண் ஒருவருக்கு மற்றொரு நீதிபதி ஒருவரால் பாதிப்பு ஏற்பட்டிருப்பதுதான் பேசுபொருளாகி உள்ளது.
மாதிரிப் படம்
மாதிரிப் படம்கோப்புப் படம்

உலகெங்கிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இதுகுறித்து விவாதங்கள் நடைபெற்றாலும், தீர்வுகள் என்பது எட்டப்படாமலேயே உள்ளது. அதிலும் மற்றவர்களுக்கு நீதி வழங்கும் நீதித்துறையிலேயே, பெண் ஒருவருக்கு மற்றொரு நீதிபதி ஒருவரால் பாதிப்பு ஏற்பட்டிருப்பதுதான் பேசுபொருளாகி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் நீதிபதி ஒருவர்தான் இந்த தாக்குதலுக்கு ஆளாகி உள்ளார். அவர், சக நீதிபதி மீது புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, கடந்த ஆண்டே, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளதாகவும், அதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தனது ஆதங்கத்தை அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட அந்தப் பெண் நீதிபதி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இரண்டு பக்க கடிதத்தை எழுதியுள்ளார்.

இதையும் படிக்க: அயோத்தியில் கட்டப்பட உள்ள பிரமாண்ட மசூதி.. அடிக்கல் நாட்டு விழாவிற்கு மெக்கா இமாம் வருகை?

அதில், ”தமக்கு நீதிபதியாக பணி வழங்கப்படுவதற்கு முன், மாவட்ட நீதிபதி தம்மைச் சந்திக்குமாறு அழைத்தார். அப்போது அவர் தன்னிடம் மிகவும் கீழ்த்தரமான முறையில் நடந்துகொண்டார். பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் மனஉளைச்சலுக்கும் ஆளானேன். இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் புகார் அளித்தேன். ஆனால் இது அலட்சியப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக போலியான நடவடிக்கை எடுப்பதாக உணர்கிறேன். விசாரணை நிலுவையில் இருப்பதால் அவரை மாவட்ட நீதிபதியில் இருந்து மாற்ற வேண்டும். இந்த வழக்கில் தவறும்பட்சத்தில், எனக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்காது. எனக்கு இனியும் வாழ விருப்பமில்லை. இந்த ஒன்றரை வருடங்களில் நான் நடைபிணமாக மாற்றப்பட்டேன். இந்த ஆன்மாவும் உயிரும் இல்லாத உடலைச் சுமந்து செல்வதில் எந்த நோக்கமும் இல்லை என்பதை தெரிந்துகொண்டேன். என் வாழ்க்கையை கண்ணியமான முறையில் முடிக்க தயவுசெய்து என்னை அனுமதிக்கவும். தற்கொலை செய்துகொள்ள அனுமதி தாருங்கள்” என அதில் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அத்துடன், மாவட்ட நீதிபதிக்கு எதிராக எழுப்பிய பாலியல் புகார்கள் மீதான விசாரணையின் நிலைகுறித்து, அலகாபாத் உயர்நீதிமன்ற நிர்வாகத்திடம் இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட் முழு அறிக்கை கேட்டுள்ளார்.

நீதிபதி ஒருவரே, பெண் நீதிபதிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருப்பதுடன், இந்த காரணத்தால் அவர் தற்கொலை செய்ய நினைக்கிறேன் என கடிதம் எழுதியிருப்பது நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க: “லடாக்கை யூனியன் பிரதேசமாக மாற்றியதை நாங்கள் அங்கீகரிக்கவில்லை; தீர்ப்பு எங்களை பாதிக்காது” - சீனா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com