uttar pradesh women attempts second marriage
model imagex page

உ.பி.| அரசின் சலுகைகளைப் பெற போலி திருமணம்.. பிடிபட்ட பெண்!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹசன்பூரில் அரசின் சலுகைகளைப் பெறுவதற்காக, போலித் திருமணம் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Published on

உத்தரப்பிரதேச மாநிலம் ஹசன்பூரில் 300க்கும் மேற்பட்ட மணமக்களுக்கு திருமணம் செய்துவைக்க அதற்கான ஏற்பாடுகள் தயாராகின. இதில் அஸ்மாவும் கலந்துகொண்டார். அவர் தனது உறவினர் ஜாபர் அகமதுவை மணக்க முடிவு செய்திருந்தார். ஆனால், அஸ்மாவுக்கு ஏற்கெனவே திருமணமாகி இருந்தது. மேலும், அவர் தனது முதல் கணவரிடமிருந்து விவாகரத்து பெறாமலேயே இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முன்வந்துள்ளார். அஸ்மா, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நூர் முகமதுவை என்பவரை திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்ததால், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கணவரை விட்டுப் பிரிந்துவந்து தனது பெற்றோருடன் அஸ்மா வாழ்ந்து வந்துள்ளார். இவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

uttar pradesh women attempts second marriage
model imagex page

இந்த நிலையில்தான் அஸ்மா, தனது உறவினரை மணக்க இருந்த நிலையில், இதுகுறித்த தகவலை அவரது மாமனார் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார். அத்துடன், அவரின் கல்யாணச் சான்றிதழையும் கொடுத்துள்ளார். அதன்பேரில், அவருடைய திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். தற்போது அவர்மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் வெகுஜன திருமணத் திட்டத்தின் விதிகளை மீறியதற்காகவும், தேவையற்ற ஆதாரங்களைப் பெறவும் விண்ணப்பித்ததற்காகவும், அரசுப் பணிகளை தடுத்ததற்காகவும் அஸ்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

முதலமைச்சரின் கூட்டுத் திருமணத் திட்டத்தின்கீழ் மணமகளுக்கு ரூ.35,000 உட்பட இலவசப் பொருட்கள் வழங்கப்படும். அந்தப் பரிசுப் பொருட்களையும் பணத்தையும் பிரித்துக்கொள்ள அஸ்மாவும் அவரது உறவினரும் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளனர். அதன்பிறகே இந்தக் களத்தில் இறங்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும், அஸ்மா அரசாங்கம் தரும் அந்தப் பணத்தில் எருமை மாடுகள் வாங்க இருந்ததாகவும் கூறப்படுகிறது.

uttar pradesh women attempts second marriage
உத்தரப்பிரதேசம்| ’விருந்தில் மீனும் இறைச்சியும் இல்லை’ - திருமணத்தை நிறுத்திய மணமகன் குடும்பத்தினர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com