பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமைFile image

உ.பி: 3 வருடங்களாக பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. சவுதியில் இருந்த கணவரின் அருவருக்கத்தக்க செயல்!

“என் குழந்தைகள் நலனை கருதியும், குடும்ப கௌரவத்தை கருதியுமே நான் இவ்வளவு நாட்கள் அமைதியாக இருந்தேன். ஆனால் இனியும் அப்படி அமைதியாக இருக்க முடியாது” - உத்தரப் பிரதேசத்தில் பெண் பாலியல் வன்கொடுமை புகார்
Published on

உத்தரப்பிரதேசத்தின் மீரட்டை சேர்ந்த 35 வயது பெண்ணொருவர், தன் கணவரின் நண்பர்கள் கடந்த 3 வருடங்களாக தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக அதிர்ச்சி புகாரொன்று கொடுத்துள்ளார்.

தன் புகாரில் அப்பெண், “என்னை பாலியல் வன்கொடுமை செய்தததை என் கணவரின் நண்பர்கள் வீடியோவாக பதிவு செய்தார்கள் . அதை என் கணவருக்கு அனுப்பியும் உள்ளனர். மேலும் தங்களின் கேவலமான செயலுக்காக அவர்கள் இருவரும், என் கணவருக்கு பணம் அனுப்பியும் வந்துள்ளனர். பணம் பெற்றுக்கொண்ட என் கணவர், அந்த வீடியோக்களை தானும் பார்த்துள்ளார்” என்று கூறியுள்ளார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

தற்போது 1 மாதம் கருவுற்றுள்ள அப்பெண், 2010-ல் திருமணமானவர் என்று சொல்லப்படுகிறது. அப்பெண்ணுக்கும் அவரின் கணவருக்கும் 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனராம். அந்த கணவர், சவுதியில் ஆட்டோமொபைல் மெக்கானிக்காக உள்ள நிலையில், வருடம் ஓரிருமுறை இந்தியா வந்து குடும்பத்துடன் இருந்துவந்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை
அண்ணா பல்கலை. வன்கொடுமை விவகாரம்.. "FIR-ஐ காவல்துறை வெளியிடவில்லை”! அரசு விளக்கம்!

தன் புகாரில் அப்பெண், “3 வருடங்களுக்கு முன் என் கணவர் சவுதியில் இருந்து இந்தியா வந்தபோது, தன் இரு நண்பர்களை அழைத்து வந்தார். அந்நபர்கள் என் கணவர் முன்னேயே என்னை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கினர். அவர்கள் இருவரும் நான் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே தற்போதும் இருக்கின்றனர். அதனால் என் கணவர் இல்லாதபோதும் அவர்கள் அக்கொடூர செயலில் அடிக்கடி ஈடுபடுகின்றனர். அவற்றை வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர்.

இதுபற்றி என் கணவரிடம் நான் சொன்னபோது அவர் அவர்களிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு என்னை அமைதியாக இருக்கும்படி கூறினார். வெளியே நான் சொன்னால், என் கணவர் என்னை விவாகரத்து செய்துவிடுவேன் என்று கூறி மிரட்டுவார். என் குழந்தைகள் நலனை கருதியும், குடும்ப கௌரவத்தை கருதியுமே நான் இவ்வளவு நாட்கள் அமைதியாக இருந்தேன். ஆனால் இனியும் அப்படி அமைதியாக இருக்க முடியாது” என்றுள்ளார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

இதுகுறித்து ஊடகங்களில் பேசியுள்ள அப்பகுதி எஸ்.எஸ்.பி, “3 வருடங்களாக இச்சம்பவம் தொடர்ந்து வந்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளதால், உரிய முறையில் விசாரணையை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com