வேறொருவரை திருமணம் செய்ய முயன்ற காதலி: திருமண விழாவில் புகுந்து சுட்டுக்கொலை செய்த இளைஞர்

வேறொருவரை திருமணம் செய்ய முயன்ற காதலி: திருமண விழாவில் புகுந்து சுட்டுக்கொலை செய்த இளைஞர்
வேறொருவரை திருமணம் செய்ய முயன்ற காதலி: திருமண விழாவில் புகுந்து சுட்டுக்கொலை செய்த இளைஞர்

உத்தரப் பிரதேசத்தில் வேறொருவரை திருமணம் செய்ய முயன்ற காதலியை திருமண விழாவில் புகுந்து காதலன் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் மதுராவின் முபாரிக்பூர் கிராமத்தில் உள்ள நௌஜீல் பகுதியில் திருமண விழா ஒன்று இன்று நடைபெற்றது. திருமண விழாவில் “ஜெய் மாலா சடங்கு” நிறைவுற்ற நிலையில், விழாவிற்குள் புகுந்த ஒருவர் திடீரென மணமகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு உறவினர்கள் அதிர்ச்சிய்டைந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால் மணப்பெண் விழா நடந்த இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.

குற்றம்சாட்டப்பட்டவர் அந்தப் பெண்ணுடன் உறவில் இருந்ததாகவும், அவர் வேறொரு ஆணுடன் திருமணம் செய்து கொண்டதால் எரிச்சலடைந்து சுட்டுக் கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. உயிரிழந்த பெண்ணின் தந்தை குபி ராம் பிரஜாபதி, “ஜெய் மாலா சடங்கு முடிந்து எனது மகள் அறைக்கு ப்ரெஷ் ஆவதற்கு சென்றபோது, அடையாளம் தெரியாத நபர் வந்து சுட்டுக் கொன்றார். இங்கு நடந்ததை என்னால் நம்ப முடியவில்லை!” என்று தெரிவித்தார்.

இந்த சம்பவம் நடந்த உடனேயே, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை புகார் பதிவு செய்ய காவல் நிலையம் சென்றார். மதுராவில் உள்ள எஸ்பி ஸ்ரீஷ் சந்திரா, “இந்த சம்பவம் குறித்து எங்களுக்குத் தெரியவந்துள்ளது. நாங்கள் புகாரைப் பதிவு செய்துள்ளோம். இந்த விஷயத்தை அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com