uttar pradesh police warning over namaz on roads
model imageani

உ.பி. | சாலையில் தொழுகை நடத்தினால் லைசென்ஸ் ரத்து!

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் ரம்ஜானின் கடைசி வெள்ளிக்கிழமை தொழுகைக்கு முன்னதாக, சாலைகளில் தொழுகை நடத்துபவர்களுக்கு எதிராக காவல் துறை கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
Published on

இஸ்லாம் மதத்தினரின் புனித மாதமாக ரம்ஜான் மாதம் தற்போது கொண்டாடப்படுகிறது. வரும் 31ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் ரம்ஜானின் கடைசி வெள்ளிக்கிழமை (இன்று) தொழுகைக்கு முன்னதாக, சாலைகளில் தொழுகை நடத்துபவர்களுக்கு எதிராக காவல் துறை கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக மீரட் எஸ்.பி. ஆயுஷ் விக்ரம் சிங், ”தொழுகைகளை உள்ளூர் மசூதிகளில் நடத்த வேண்டும். யாரும் சாலைகளில் தொழுகை நடத்தக்கூடாது. எச்சரிக்கையை மீறுபவர்களின் பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்” என தெரிவித்துள்ளார்.

uttar pradesh police warning over namaz on roads
model imagex page

மீரட் மூத்த காவல் கண்காணிப்பாளர் விபின் தடா, ”மாவட்ட மற்றும் காவல் நிலையங்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டு, அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடியதன் அடிப்படையில் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில் பதற்றமிக்க பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அங்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அமைதியைப் பேணுவதற்கும், வரவிருக்கும் பண்டிகைகளை சீராகக் கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்கும், நிர்வாகம் முக்கிய பிரமுகர்கள் மற்றும் மதத் தலைவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. சமூக ஊடகங்கள் மூலம் வதந்திகளைப் பரப்புபவர்கள் அல்லது அமைதியின்மையைத் தூண்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரும் ராஷ்டிரிய லோக் தளம் தலைவருமான ஜெயந்த் சிங் சவுத்ரி, “தனிநபர்கள் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டால், அவர்களின் பாஸ்போர்ட்டுகள் மற்றும் உரிமங்கள் ரத்து செய்யப்படும். நீதிமன்றத்திலிருந்து தடையில்லாச் சான்றிதழ் (NOC) இல்லாமல் புதிய பாஸ்போர்ட்டை பெறுவது கடினமாகிவிடும். நீதிமன்றத்தால் தனிநபர்கள் விடுவிக்கப்படும் வரை அத்தகைய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

uttar pradesh police warning over namaz on roads
உ.பி.| ”தார்ப்பாயால் மூடிக்கொள்ளுங்கள்” ஹோலி அன்று வரும் தொழுகை.. பாஜகவினரின் தொடர் சர்ச்சைப் பேச்சு
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com