கொரோனாவால் பாதிக்கப்பட்ட உத்தரப்பிரதேச மாநில அமைச்சர் கமலாராணி வருண் உயிரிழப்பு
உத்தரப்பிரதேச மாநிலத்தின் தொழிற்கல்வித்துறை அமைச்சராக உள்ள கமலாராணி வருண் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இவர் கான்பூர் நகரிலுள்ள கடாம்பூர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். 1996 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றியவர் இவர். இவரின் மறைவையொட்டி மாநிலம் முழுவதும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.
62 வயதான கமலாராணிக்கு, ஜூலை 18 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியானது, அதன்பிறகு அவர் தொடர்ந்து சிகிச்சைப்பெற்றுவந்தார். மாநில சுகாதாரத்துறையின் தகவல்களின்படி “ கொரோனோ தொற்று இவருக்கு உறுதியான பிறகு எஸ்ஜிபிஜிஐ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்தார். இவரது சிறுநீரகங்களில் தொற்று ஏற்பட்டதால் இவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்” என்று தெரிவிக்கின்றனர்.