uttar pradesh man takes friends help to run over wife wanted to marry her sister
up photox page

உ.பி. | நண்பனை வைத்து பக்கா பிளான்.. விபத்து போல் நாடகம்; மைத்துனியை மணக்க மனைவியை கொலை செய்த கணவர்!

மைத்துனியை மணப்பதற்காக, மனைவியைக் கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Published on

உத்தரப்பிரதேசம் மாவட்டம் பிஜ்னோரைச் சேர்ந்தவர் அங்கித் குமார். இவருக்கு திருமணமாகி மனைவி கிரணுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த மார்ச் 8ஆம் தேதி, மாமியார் வீட்டிலிருந்து தனது வீட்டிற்கு மனைவியை பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது பெட்ரோல் பங்கில் தனது பைக்கிற்கு எரிபொருள் நிரப்புவதற்காக சாலையோரத்தில் கிரணை விட்டுவிட்டுச் சென்றுள்ளார். அந்த நேரத்தில், கிரண் மீது கார் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக அங்கித் போலீஸில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணையில் இறங்கினர்.

அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், விபத்தை ஏற்படுத்திய காரின் உரிமையாளர் அங்கித்தின் நண்பர் சச்சின் என தெரிய வந்தது. அவரைப் பிடித்து விசாரித்ததில் ​​அங்கித் செய்த சதித் திட்டம் தெரிய வந்தது.

அதாவது, அங்கித்துக்கு திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆவதாகவும், ஆனால் குழந்தைகள் இல்லாததால் மனைவியின் தங்கையை திருமணம் செய்துகொள்ள நினைத்ததாகவும் கூறியுள்ளார். மேலும் அந்த விருப்பத்தை மைத்துனியிடம் தெரிவித்துள்ளார். அக்கா உடன் வாழ்ந்து வருவதால் அங்கித்தின் விருப்பத்திற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதன்காரணமாகவே, அவர் தனது மனைவியை கொலை செய்ய திட்டம் வகுத்திருந்தார் என போலீசார் தெரிவித்துள்ளார்.

uttar pradesh man takes friends help to run over wife wanted to marry her sister
உத்தரப்பிரதேசம் | ரொட்டி வழங்க தாமதம்.. திருமணத்தை நிறுத்திய மணமகன்.. வழக்கு தொடுத்த பெண்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com