\
மழை நீர் ஒழுகும் அரசு பங்களா; உ.பி. அமைச்சர் வெளியிட்ட வீடியோ

மழை நீர் ஒழுகும் அரசு பங்களா; உ.பி. அமைச்சர் வெளியிட்ட வீடியோ

மழை நீர் ஒழுகும் அரசு பங்களா; உ.பி. அமைச்சர் வெளியிட்ட வீடியோ
Published on

அரசு தனக்கு வழங்கிய பங்களாவில் மழை நீர் ஒழுகுவதாகவும் இது தான் அரசு பங்களாவின் பரிதாப நிலை என்றும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சுகாதார துறை அமைச்சரான சித்தார்த் நாத் சிங் வெளியிட்டுள்ள வீடியோவில் மேல் சுவரில் மழைநீர் ஒழுகுவதும், தரையில் தண்ணீர் தேங்கி நிற்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. கடந்த அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசு பங்களாவை உரிய முறையில் பராமரிக்கவில்லை என கூறும் வகையில் இதனை அவர் வெளியிட்டதாக தெரிகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com