நோயாளிகள் ஆம்புலன்ஸில் செல்ல ஆதார் கார்டு அவசியம்: உ.பி. அரசு

நோயாளிகள் ஆம்புலன்ஸில் செல்ல ஆதார் கார்டு அவசியம்: உ.பி. அரசு

நோயாளிகள் ஆம்புலன்ஸில் செல்ல ஆதார் கார்டு அவசியம்: உ.பி. அரசு
Published on

உத்தரப் பிரதேச அரசின் இலவச ஆம்புலன்ஸ் சேவையை பெற ஆதார் கார்டு அவசியம் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

உ.பி. அரசின் இலவச ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைக்கும்போது நோயாளியின் உறவினர்களோ, அக்கம்பக்கத்தினரோ அவர்களது ஆதார் எண்ணைக் கொடுக்க வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் நோயாளிகள் தேவையில்லாமல் இலவச சேவையைப் பயன்படுத்துவது தடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதுகுறித்து உ.பி. மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், “அரசின் சேவையை யாரும் தவறாக பயன்படுத்தக் கூடாது. ஓட்டுநர் பல நேரங்களில் பொய் சொல்லிவிட்டு ஆம்புலன்ஸை எடுத்துச் சென்றுவிடுகிறார். பொய்கணக்கு சொல்லி எரிபொருள் கட்டணம் பெறுகிறார்கள். நண்பர்களை வைத்து ஆம்புலன்ஸ் தேவை என்று பொய்யாக கால் செய்கிறார்கள். இதுபோன்ற முறைகேடுகளைத் தடுப்பதன் மூலம் உண்மையாக ஆம்புலன்ஸ் தேவைப்படுவோருக்கு சேவை சென்றடையும்” என்கின்றனர்.

ஆனால் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கிராமவாசிகள் கூறும்போது, “ஆதார் கார்டு இல்லாத கிராம மக்கள் பல கோடி பேர் இன்னும் கிராமங்களில் உள்ளனர். இந்த உத்தரவு சாதாரண அடித்தட்டு மக்களைக் கடுமையாக பாதிக்கும். அதுமட்டுமல்ல, அவசரமாக ஆம்புலன்ஸை அழைக்கும்போது ஆதார் கார்டை தேடிக் கொண்டிருக்க முடியாது” என்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com