மத்திய அரசை முடிவு செய்யும் உ.பி - கூட்டணியால் வரும் திருப்பம்

மத்திய அரசை முடிவு செய்யும் உ.பி - கூட்டணியால் வரும் திருப்பம்
மத்திய அரசை முடிவு செய்யும் உ.பி - கூட்டணியால் வரும் திருப்பம்

சமாஜ்வாதி - ‌பகுஜன் சமாஜ் கூட்டணி ம‌க்களவைத் தேர்தலில் முக்கிய திருப்பமாக பார்க்க‌ப்படுகிறது. 

நாட்டிலேயே மிக அதிக அளவாக 80 மக்களவை தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேச மாநிலம், மத்தியில் எந்த ‌கட்சி அமைக்கும் என்பதை முடிவு செய்வதில் முக்கிய இடம் வகிக்கிறது. கடந்த 20‌14ம் ஆண்டு மக்களவை தேர்தலில் 80 தொகுதிகளில் பாஜக கூட்டணி 73‌ தொகுதிகளை வென்றதால் தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியமைக்க முடிந்தது. ஆனால், இம்முறை உத்தரப்பிரதேசத்தில் வலுவான இரு கட்சிகளான சமாஜ்வாதியும் பகுஜன் சமாஜும் கைகோர்த்திருப்பது வரும் தேர்தலில் பாரதிய ஜனதாவிற்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.‌ கடந்த 2014 ‌மக்களவைத் தேர்தல் 2‌017ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இதை உண‌ர்த்துவதாக உள்ளது.

2‌01‌‌4ம் ஆண்டு‌ தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 42.3 சதவிகித வாக்குகளுடன் 71 இடங்களில் வென்றிருந்தது. சமாஜ்வாதி கட்சி 22.2 சதவிகித வாக்குகளுடன் 5 இடங்களில் வென்றிருந்தது. பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாவிட்டாலும் 19.6 சதவிகித வாக்குகளை பெற்றிருந்தது. காங்கிரஸ் கட்சி 7.5 சதவிகித வாக்குகளுடன் 2 இடங்களை பெற்றிருந்தது. 2017ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 39.7 சதவிகித வாக்குகளுடன் 312 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. சமாஜ்வாதி கட்சி 22 சதவிகித வாக்குகளுடன் 47 தொகுதிகளை வென்றிருந்தது. பகுஜன் சமாஜ் கட்சி 22.2 சதவிகித வாக்குகளுடன் 19 தொகுதிகளை வென்றிருந்தது. சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டு சேர்ந்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 6.2 சதவிகித வாக்குகளுடன் 7 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.

இப்புள்ளிவிவரங்களில் இருந்து 2014 தேர்தலில் பாஜகவை விட சமாஜ்வாதி, பகுஜன் சற்றே குறைவான வாக்குகளையே பெற்றிருப்பதும் 2017 தேர்தலில் பாஜகவை விட சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கூட்டாக அதிக வாக்குகளை பெற்றிருந்ததும் தெரிய வருகிறது. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com