உ.பி: சிறுநீர் குடிக்கச் சொல்லி சிறுவனை கட்டாயப்படுத்திய இருவர்? கண் புருவத்தையும் நீக்கி கொடுமை!
உத்தரபிரதேசம் மாநிலம் ஜான்பூரில் சுஜான்கஞ்ச் அருகே பட்டியலின சிறுவனை, சிறுநீர் குடிக்க இருவர் கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது.
சுஜான்கஞ்ச் அருகே நடந்த இச்சம்பவத்தில் சிறுவனை கடுமையாக தாக்கி கண் புருவத்தையும் அவர்கள் நீக்கியுள்ளனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் தெரியவரவே, கொடூர தாக்குதல் நடத்திய இருவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுவனை மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதனிடையே, தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணிடம் சிறுவன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதன் காரணமாகவே இந்த செயலில் ஈடுபட்டதாக, தாக்குதல் நடத்தியவர்கள் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, ‘அது உண்மையெனில் அவர்கள் காவல்துறையைதானே அனுகியிருக்க வேண்டும். எதிர்வினையாற்ற, அதுவும் இப்படி மனிதத்தன்மையே இல்லாமல் செயல்பட இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது’ என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிகழ்வு சாதிய வன்கொடுமையால் நடந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.