ரூ.700க்கு Thar car வாங்க ஆசைப்பட்ட சிறுவன்.. ருசிகர பதிலளித்த ஆனந்த் மகேந்திரா!

ரூ.700-க்கு கார் வாங்க ஆசைப்பட்ட சிறுவனுக்கு மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா பதிலளித்த வீடியோ வைரலாகி வருகிறது.
சிக்கு யாதவ், ஆனந்த் மகேந்திரா
சிக்கு யாதவ், ஆனந்த் மகேந்திராட்விட்டர்

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த சிறுவன் சிக்கு யாதவ். இவர், மகேந்திரா நிறுவனம் தயாரிக்கும்Thar car வாங்க விரும்பியுள்ளார். இதற்காக, தன்னிடம் உள்ள 700 ரூபாயைவைத்து காரை வாங்க முடியும் என எண்ணிய சிறுவன் தந்தையிடம் கேட்டுள்ளார். மகன் கூறியதை தந்தை வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில், அது மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா பார்வைக்கும் சென்றுள்ளது.

இதுதொடர்பாக ஆனந்த் மகேந்திரா வெளியிட்ட பதிவில், ”எனது நண்பன் சோனி இந்த வீடியோவை எனக்கு அனுப்பினார். ஆகையால் அவரின் வீடியோக்கள் சிலவற்றை இன்ஸ்டாகிராமில் பார்த்தேன். எனக்கு சிக்குவை (சிறுவன்) பிடித்திருக்கிறது. ஒரேஒரு பிரச்னை. என்னவென்றால். சிக்கு கூறியதை நாங்கள் உறுதிபடுத்தி Thar car-ஐ 700 ரூபாய்க்கு விற்றால், விரைவிலேயே நாங்கள் திவாலாகிவிடுவோம்' எனப் பதிவிட்டுள்ளார்.

இதற்கு நெட்டிசன்கள் பல்வேறு பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அதில் ஒரு பயனர், “ரூ.700-ஐச் செலுத்தி Thar car-ஐ முன்பதிவு செய்யும் நபர்களுக்கு அதிர்ஷ்ட குலுக்கல் போட்டியை வைக்கலாம்” எனவும், மற்றொரு நபர், “ஐயா, குழந்தையின் விருப்பம் நிறைவேறும் வகையில் அவருக்கு கார் ஒன்றைப் பரிசாகக் கொடுங்கள். அவருடைய சாண்டாவாக இருங்கள்” எனவும் பதிவிட்டுள்ளனர். மேலும் இன்னொருவரோ, “அந்தக் குழந்தை எதுவும் அறியாமல், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உங்கள் பிராண்டை விரும்பியுள்ளது. அதுவே தற்போது விளம்பரமாக மாறியிருக்கிறது. தயவுசெய்து கார் ஒன்றைப் பரிசாக வழங்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com