\
உ.பி.யில் பயங்கரம்.. பாஜக எம்.பி. மகன் மீது துப்பாக்கிச்சூடு

உ.பி.யில் பயங்கரம்.. பாஜக எம்.பி. மகன் மீது துப்பாக்கிச்சூடு

உ.பி.யில் பயங்கரம்.. பாஜக எம்.பி. மகன் மீது துப்பாக்கிச்சூடு
Published on

பாஜக மக்களவை உறுப்பினரான கௌசால் கிஷோரின் மகனை பைக்கில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினர். 

உத்தரப்பிரதேசம் மாநிலத்திலுள்ள மோகன்லால்கஞ்ச் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் கௌசால் கிஷோர். இவரது மனைவி ஜெயா தேவி, பாஜக சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

இந்த தம்பதியரின் மூத்த மகன் 30 வயதான ஆயுஷ் கிஷோர், இன்று (புதன்கிழமை) அதிகாலை வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, லக்னோ நகரின் மாண்டியான் என்ற பகுதியில் பைக்கில் வந்த மர்ம நபர்கள் ஆயுஷின் கையிலும் மார்பிலும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியுள்ளனர். ஆயுஷ் கிஷோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆயுஷ் கிஷோர் இரண்டாவது முறையாக தாக்கப்பட்டுள்ளதால் இது முன்விரோதத்தின் காரணமாக நடந்ததாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கண்காணிப்பு காமிரா பதிவுகளைக் கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக கௌசால் கிஷோரின் நெருங்கிய உறவினர் ஒருவர் சந்தேகத்தின்பேரில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  கௌசால் கிஷோரின் இளைய மகன் ஆகாஷ் கிஷோர், ஏற்கெனவே சிறுநீரக செயலிழப்பால் இறந்துவிட்டார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com