"எனக்கு கொரோனா வராததற்கு காரணம் கோமியம் அருந்துவதே" - உத்தரப் பிரதேச பாஜக எம்.எல்.ஏ

"எனக்கு கொரோனா வராததற்கு காரணம் கோமியம் அருந்துவதே" - உத்தரப் பிரதேச பாஜக எம்.எல்.ஏ

"எனக்கு கொரோனா வராததற்கு காரணம் கோமியம் அருந்துவதே" - உத்தரப் பிரதேச பாஜக எம்.எல்.ஏ
Published on

உத்தரப் பிரதேச மாநிலத்தின் பைரியா சட்டமன்ற உறுப்பினரும், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவருமான சுரேந்தர் சிங், கோமியம் குடிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

மூன்று நிமிடங்களுக்கு மேல் ஓடக்கூடிய அந்த வீடியோவில், கொரோனாவால் ஒட்டுமொத்த நாடும் பெரும் பிரச்சனைகளை சந்தித்து வரக்கூடிய நிலையில், நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றாக கோமியம் குடிக்க முன்வர வேண்டும் என சுரேந்தர் சிங் வேண்டுகோள் விடுக்கிறார்.

அதுமட்டுமில்லாமல், அதனை எப்படி குடிக்க வேண்டும், எந்த நேரத்தில் குடிக்க வேண்டும், எப்படியெல்லாம் உடலுக்குள் அது செயல்படுகிறது உள்ளிட்ட விளக்கங்களும் கூறுகிறார். கொரோனா பாதிப்பு தனக்கு இதுவரை ஏற்படவில்லை என்றும், ஒரு நாளைக்கு 18 மணி நேரத்திற்கும் மேலாக உழைத்தும் தான் ஆரோக்கியமாக இருப்பதற்கு முழு காரணம், கோமியம் குடிப்பதுதான் எனவும் அந்த வீடியோவில் குறிப்பிடுகிறார் எம்.எல்.ஏ சுரேந்தர் சிங்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com