இந்தியா
உத்தரப்பிரதேசம்: வரதட்சணை கேட்டு மனைவியை கொடூரமாக தாக்கி கொலை செய்த கணவன்
உத்தரப்பிரதேசம்: வரதட்சணை கேட்டு மனைவியை கொடூரமாக தாக்கி கொலை செய்த கணவன்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் கொடூரமான முறையில் கணவரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் புலாந்த்ஸார் மாவட்டத்தை சேர்ந்த ஹசீம் என்பவர், தனது மனைவியை குடும்பத்தினர் முன்னிலையில் கொடூரமாக தாக்கும் காட்சி சமூகவலைதளங்களில் வெளியானது. வெள்ளிக்கிழமை இந்த காட்சி வெளியான நிலையில் தாக்குதலில் படுகாயமடைந்த அந்தப்பெண் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் வரதட்சணை கேட்டு தனது மகளை கொலை செய்துவிட்டனர் என அப்பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கொலை மற்றும் வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ள காவல்துறையினர், தலைமறைவாக உள்ள ஹசீமை தேடி வருகின்றனர்.