அப்பாவின் சடலத்தை 8 கி.மீ தூரம் ரிக்‌ஷாவில் இழுத்துச் சென்ற குழந்தைகள்..!

அப்பாவின் சடலத்தை 8 கி.மீ தூரம் ரிக்‌ஷாவில் இழுத்துச் சென்ற குழந்தைகள்..!
அப்பாவின் சடலத்தை 8 கி.மீ தூரம் ரிக்‌ஷாவில் இழுத்துச் சென்ற குழந்தைகள்..!

உத்தரப்பிரதேசத்தில் மருத்துவமனையில் உயிரிழந்த தந்தையின் உடலை 8கி.மீ தூரம் ரிக்‌ஷாவில் குழந்தைகள் இழுத்துச் சென்ற அவலம் நடந்துள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் பாராபங்கி பகுதியை சேர்ந்தவர் மன்ஷரம். இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது சடலத்தை கொண்டு செல்ல வேன் வசதி இல்லாததால் சைக்கிள் ரிக்‌ஷாவில் கொண்டு சென்றனர் அவர்களது பிள்ளைகள்.

மாற்றுத்திறனாளியான மகன் மற்றும் சிறுவயது மகள் தந்தையின் சடலத்தை சுமார் 8 கி.மீ தூரம் சைக்கிள் ரிக்‌ஷாவில் கொண்டு சென்றனர். வடஇந்தியாவில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது தொடர் கதையாகி வருகிறது. தங்கள் உயிருக்கு உயிரானவர்கள் எதிர்பாராத விதமாக உயிரிழக்கும் போது அவர்களின் சடலத்தை வீட்டுக்கு கொண்டு செல்ல முடியாத அவலம் ஏற்படுகிறது. சிலர் தங்களது தோள்களில் சுமந்தபடி சடலத்தை தூக்கிச் சென்ற அவலம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com