ரூ.500க்கு விற்கப்பட்ட வினாத்தாள்கள்.. பிளஸ் 2 தேர்வு திடீர் ரத்து - எந்த மாநிலத்தில்?

ரூ.500க்கு விற்கப்பட்ட வினாத்தாள்கள்.. பிளஸ் 2 தேர்வு திடீர் ரத்து - எந்த மாநிலத்தில்?
ரூ.500க்கு விற்கப்பட்ட வினாத்தாள்கள்.. பிளஸ் 2 தேர்வு திடீர் ரத்து - எந்த மாநிலத்தில்?

உத்தரபிரதேசத்தில் பிளஸ் 2 ஆங்கிலத் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று ஆங்கிலத் தேர்வு நடைபெறுவதாக இருந்தது.

ஆனால், இந்த தேர்வுக்கான வினாத்தாள், பாலியா மாவட்டத்தில் இரு தினங்களுக்கு முன்பு கசிந்ததாகவும், ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் மாநிலக் கல்வி வாரியத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பல மாவட்டங்களில் இந்த வினாத்தாள் கசிவு நடைபெற்றுள்ளது தெரியவந்தது.

இதன் தொடர்ச்சியாக, பாலியா, எடா, பாஹ்பத், பதோன், சீதாபூர், கான்பூர், லலித்பூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இன்று நடைபெறவிருந்த ஆங்கிலத் தேர்வை மாநிலக் கல்வி வாரியம் ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த மாவட்டங்களில் விரைவில் மறுதேர்வு நடத்தப்படும் என்றும், வினாத்தாள் கசிந்தது குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com