78 வயதிலும் ஓட்டப் பந்தயத்தில் அசத்தும் பெண்மணி

78 வயதிலும் ஓட்டப் பந்தயத்தில் அசத்தும் பெண்மணி
78 வயதிலும் ஓட்டப் பந்தயத்தில் அசத்தும் பெண்மணி

பெண்களுக்கு தயக்கமும், பயமும் இருக்கக் கூடாது என்று, 78 வயதிலும் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று அசத்தும் மூதாட்டி உஷா சோமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், எதிர்மறையாக சிந்திப்பதால், நம்மால் எதுவும் செய்ய முடியாது‌ என்று கூறியுள்ளார். 51 வயதான பிரபல நடிகர் மிலிந்த் சோமன், உலக அளவிலான ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். அவரது தாயாரான உஷா சோமன், 78 வயதிலும், வெறுங்காலுடன், சேலை அணிந்து கொண்டு ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று அசத்தி வருகிறார். உடலையும், மனதையும் உறுதியாக வைத்திருக்கும் உஷா சோமனை, இரும்பு பெண்மணி என்றே விளையாட்டு ரசிகர்கள் அழைக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com