"இந்தியா-பாகிஸ்தான்-சீன எல்லை விவகாரத்தில் பதற்றம் மேலும் அதிகரிக்கலாம்" அமெரிக்கா கணிப்பு

"இந்தியா-பாகிஸ்தான்-சீன எல்லை விவகாரத்தில் பதற்றம் மேலும் அதிகரிக்கலாம்" அமெரிக்கா கணிப்பு
"இந்தியா-பாகிஸ்தான்-சீன எல்லை விவகாரத்தில் பதற்றம் மேலும் அதிகரிக்கலாம்" அமெரிக்கா கணிப்பு

வரும் நாட்களில் இந்தியா-பாகிஸ்தான்-சீன எல்லை விவகாரத்தில் பதற்றம் மேலும் அதிகரிக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை கணித்துள்ளது. 

இந்தியாவின் மேற்கு எல்லை பகுதிகளை பெரும்பாலும் சீனா பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளே பகிர்ந்து கொள்கிறது. இதில் சீனா-பாகிஸ்தான் இடையே இந்தியாவுக்கு எதிரான தொடர் எல்லை பிரச்சினை நிலவும் சூழலில், வரும் நாட்களில் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் மற்றும் சீன எல்லை பிரச்சனைகள் அதிகரிக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை அந்நாட்டு எம்பிக்களிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

இருப்பினும், எந்த ஒரு சவால்களையும் சமாளிக்க கூடிய வகையில் இந்திய ராணுவமும் தயார் நிலையில் உள்ளதாக கூறியுள்ளது அமெரிக்க உளவுத்துறை. ‘சீனா மற்றும் பாகிஸ்தானின் ஆத்திரமூட்டம் செயல்களுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுப்பதற்கு அவர்களது ராணுவத்தை தயார் நிலையில் வைத்திருக்கிறது’ என்றும் அமெரிக்க உளவுத்துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்று முறைக்கு மேல் சீன ராணுவ குழுக்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதில் இரு தரப்புக்கும் கணிசமான உயிரிழப்புகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com